யோக முத்திரைகள் பற்றிய செயல்முறைகளையும், பயன்களையும் வண்ணப் படங்களோடு விவரிக்கும் நேர்த்தியான நுால். முத்திரைகளின் வகை சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உடல் அமைப்பிற்கு ஏற்ப கைவிரல்களை பொருத்தி, மறைந்திருக்கும் குண்டலினி சக்தியைத் துாண்டும் செயல்முறை விவரிக்கப்பட்டுள்ளது. உடல் ஆற்றல் மையங்களான சக்கரங்கள் பற்றியும் தரப்பட்டுள்ளது.
எலும்பு, தசைகளில் பொதிந்துள்ள ஆற்றலை துாண்டி குறை நீக்கி இயங்கச் செய்வது விளக்கப்படுகிறது. உடலுறுப்பு, சுரப்பி, நரம்புகளில் முத்திரை ஏற்படுத்தும் மின்காந்த விசைகள் பற்றியும் உள்ளது. அக்குபங்சர், வர்மக்கலை, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ முறைகளில் அறிவியல் சார்ந்த முத்திரைகள் இடம் பெறுவது எடுத்துக் காட்டப்பட்டு உள்ளது. நல்வாழ்வை விரும்புவோர் படிக்க வேண்டிய நுால்.
–
கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு