இரட்டிப்பு கொலை வழக்குகளுடன் சுடச்சுட வந்துள்ள நுால். பல நேரங்களில் செய்திகளை விட அதன் பின்னணி ஆச்சரியம், அதிர்ச்சி தரும் என குறிப்பிட்டு, உண்மை தன்மை மாறாத கதை படிக்கலாம் என நம்பிக்கை தருகிறார்.
ஆட்டோ சங்கர், நாவரசு, பிரேமானந்தா, டாக்டர் பிரகாஷ் என முக்கிய வழக்குகளின் பின்னணியை படிக்கும் போது, வழக்கு விசாரணையை நீதிமன்றத்தில் அமர்ந்து பார்ப்பது போல தோன்றுகிறது.
கொலையானவரின் வாழ்க்கை நிகழ்வுகள் சிறு குறிப்பாக இருப்பதால் வீட்டு தியேட்டரில், புத்தக திரையில் சினிமா பார்ப்பது போல் உணர்வு ஏற்படுகிறது. வழக்கறிஞர், சட்ட கல்லுாரி மாணவர்கள் படிக்க வேண்டிய முக்கிய புத்தகம் இது. பக்கமெல்லாம் நம் கைவிரல் ரேகை பதியும் என்பதை தான் அட்டை பக்கத்து சிவப்பு கைவிரல் ரேகை படம் உணர்த்தியது என்ற உண்மை, புத்தகம் படித்து முடித்த பிறகு தான் தெரிந்தது. மொத்தத்தில் தீர்ப்புகளை தாங்கி வந்த புதிய வார்ப்புகள்.
–
ஸ்ரீனி