மனதை ஒருநிலைப்படுத்தி, வலிமை அளித்து, உடல் பிரச்னைகளுக்கு தீர்வளித்து, மன அமைதியை அளிக்கும் யோக பயிற்சி பற்றி விளக்கியுள்ள நுால். யோகா என்பது எந்த ஒரு மதத்தையும், சடங்குகளையும் சார்ந்தது இல்லை. அது எல்லாருக்கும் பொதுவான ஒன்று என்று கூறப்பட்டுள்ளது.
யாமா, நியமா, ஆசனா, பிராணயமா, பிரத்யஹரா, தாரணா, தியானா, சமாதி என்ற எட்டு படிநிலைகளைக் கொண்டுள்ளது. இவற்றில் உடலைக் கட்டுப்படுத்துதல், கடைப்பிடித்தல், சுத்தமாக இருத்தல், கவனித்தல், தன்னை அறிதல், சரணாகதி, மூச்சுப் பயிற்சி, மனதை ஒருநிலைப்படுத்துதல், தியானம் உள்ளிட்ட பல நிலைகள் உள்ளன.
நுாலின் துவக்கத்தில் யோக சூத்திரங்கள் பற்றிய அறிமுகம் தரப்பட்டுள்ளது. யோகா, ஆசனங்கள் குறித்த தகவல்களும் அளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆசனத்தையும் விளக்கும் வகையில், தேவையான இடங்களில் வண்ணப் படங்கள் தரப்பட்டுள்ளன. யோகா குறித்து அறிய துணை புரியும் நுால்.
–
முகில் குமரன்