முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி ஆங்கில ஆட்சிக்கு எதிராக சொந்த மண்ணில் ஆற்றிய விடுதலைப் போராட்ட வரலாற்றை கூறும் நுால். கடந்த 17, 18ம் நுாற்றாண்டுகளில் வெள்ளையருக்கு எதிராக நிகழ்ந்த போரையும், ஆங்கிலேயருக்குத் துணை நின்ற நவாப்புகளை எதிர்கொண்டதையும் விரிவாக எடுத்துரைக்கிறது.
சேது மன்னர்கள் பட்டியலில் இறுதியாக இடம் பெற்றவர் முத்துராமலிங்க சேதுபதி ஆவார். ராமநாதபுரம் கோட்டையைத் தலைமை இடமாக்கொண்டு ஆண்டு வந்தவர்கள் சேதுபதி மரபினர். கோட்டையை நவாப் கைப்பற்றிய சூழல், முத்துராமலிங்க சேதுபதியின் 12 ஆண்டு கால ஆட்சியில் நிலவிவந்த சமூகம், வணிகம் சார்ந்த செய்திகள், ராமநாதபுரத்திற்கும், சிவகங்கைக்கும் இடையில் எழுந்த பிணக்குகள் மற்றும் பல செய்திகள் கூறப்பட்டுள்ளன. சேதுபதி பற்றிய வரலாற்று ஆவணமாக விளங்கும் நுால்.
–
ராம.குருநாதன்