ஆறுகளின் அருமை பெருமை வரலாற்றை கூறும் நுால். ஆற்றங்கரை பண்பாடு, நாகரிகம், ஆறுகளை காக்கும் கடமை பற்றி கூறப்பட்டு உள்ளது. கங்கை, கோதாவரி, கிருஷ்ணா, யமுனை, நர்மதா, துங்கபத்ரா, காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, பொருநை, பிரம்மபுத்ரா, சிந்து, சரஸ்வதி, பீமா நதி, சந்திரபாகா, சரயு, பல்குனி, கோமதி, பம்பா ஆறுகளின் சிறப்பு தரப்பட்டுள்ளது.
சிந்து, கங்கை, காவிரி, வைகை நாகரிகத்துக்கு வழிகாட்டியது விவரிக்கப்பட்டுள்ளது. காசியும், ராமேஸ்வரமும்; கங்கையும், சேதுவும் ஒருமைப்பாட்டிற்கு உதாரணமாக உள்ளதை அழகுற விவரிக்கிறது. கோதம முனிவர் உருவாக்கியது கோதாவரி, கங்கையை பகீரதன் கொண்டு வந்தான், அகத்தியர் கமண்டலத்திலிருந்து காவிரி வந்தது போன்ற அரிய செய்திகள் குவியலாக உள்ளன. பாரதம் முழுதும், 33 ஆறுகளின் சிறப்பையும், பெருமைகளையும் கூறும் நுால்!
–
முனைவர் மா.கி.ரமணன்