மனிதன் படைத்ததை வணங்குவதை விட்டு, அனைத்தையும் படைத்தவனை வணங்குவதே அறிவார்ந்த செயல் எனக் குறிப்பிடும் நுால். உலகம் தோன்றியது பற்றி ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்கள் கூறும் கருத்துக்கள் நிரல்படுத்தப்பட்டுள்ளன.
நளன் – தமயந்தி, யோபு – ரஹிமா வாழ்விணையர் இருவேறு மார்க்கத்தைச் சார்ந்திருந்தாலும், வாழ்வில் நிலவும் ஒற்றுமையைக் குறிப்பிடுகிறது. ஹிந்து மத புராண, இதிகாசங்களில் பேசப்படும் சிறு தொண்டர், பிரகலாதன், மகாபாரத பாண்டவர்கள், ராமாயண தசரதன், கிருஷ்ண அவதாரம், கல்கி அவதாரம் போன்ற பாத்திரங்கள் பிற சமயங்களிலும் பிரதிபலிக்கப்படுவதை சான்றுகளுடன் முன் வைக்கிறது.
ஹிந்து சமயத்தினர் முஸ்லிம்களையும், இஸ்லாமை ஹிந்துக்களும் புரிந்துகொள்ளும் நாளே இந்தியாவின் பொற்காலம் என நினைவுகூர்ந்து, பரந்த மனப்பான்மையையும், ஆன்மிக தெளிவையும், பாரபட்சமற்ற பார்வையையும் வெளிப்படுத்தும் நுால்.
–
புலவர் சு.மதியழகன்