வள்ளலார் வரலாறு, அருள் நிகழ்வுகள், பசிப்பிணி போக்கிய தருமச்சாலையின் சேவை, பசிப்பிணி மருத்துவம், மரணம் இல்லாப் பெருவாழ்வு பற்றி அழகுற பேசும் நுால்.
சன்மார்க்கம் எல்லா உயிர்களையும் தன்னைப் போல பாவித்தல் என்பது வள்ளலார் வழியில் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. ஒரே ஒளி இறைவன், அருட்ஜோதி ஆண்டவர், சிறு தெய்வ பலி, வழிபாடு கூடாது, ஜாதி, மத, சமய, இன பேதங்கள் இல்லை. பொது நோக்கும், பசி நீக்கலும் தேவை என்ற வள்ளலார் வழி திறந்து காட்டப்பட்டுள்ளது.
இல்லாமை தரும் வறுமைப் பசியால் வீடும், நாடும் வேதனை அடைவதை பிரித்து விளக்கி, தருமச் சாலையில் அன்னப் புரட்சி செய்ததை கண் முன் நிறுத்துகிறார். வள்ளலார் ஏற்றிய அடுப்பு, 155 ஆண்டுகளாக தொடர்ந்து எரிந்து ஏழைகள் வயிறைக் குளிர வைக்கிறது. மனதை நிறைவிக்கும் தருமச்சாலை பற்றிய தரமான நுால்.
–
முனைவர் மா.கி.ரமணன்