மாணவச் செல்வங்களின் மனதில் நேர்மை, நல்லொழுக்கம் போன்ற நல்ல பண்புகளை விதைக்கும் வகையில் எழுதப்பட்ட, 20 சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொரு கதைக்கும் ஏற்ற படங்களுடன், சுலபமாக வாசிக்கும் வகையில் பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்டு இருப்பதால் விரும்பி படிக்க முடியும்.
ஒவ்வொரு கதையின் முடிவிலும் நீதி வரிகள் உள்ளன. மாணவர்கள் இந்த மாதிரி புத்தகங்களை படித்தால் எதிர்காலம் சிறக்கும். வாய்மையே வெல்லும் அரிச்சந்திரன் கதையால் தான், காந்தியடிகள் வாய்மை விரதம் கொண்டார். அதை, ஒரு கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி மூலம் காட்டுகிறார்.
பிறரை கேலி செய்யும் போது மனம் வலிக்கும் என்ற நிலையை உணர்ந்து கொண்டால் அது தவிர்க்கப்படும் என மிக அழகாக காட்டுகிறார். மாணவர்களுக்கு உகந்த கதை நுால்.
–
சீத்தலைச் சாத்தன்