பிரபஞ்சத்தின் தோற்றம், தொன்மை பற்றி எழுதப்பட்டுள்ள நுால். அண்டத்தில் நிகழும் எல்லா நிகழ்வுகளும் பொருள் ஈர்ப்பு விசை, மின்காந்த விசை, மென் விசை, அணுவின் பெருவிசை என்ற அடிப்படை விசைகளை கொண்டே நிகழ்கின்றன என பதிவிடப்பட்டுள்ளது.
கடல்வாழ் உயிரினங்களின் தோற்றம், உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி, சிந்து வெளி நாகரிகம், பிரபஞ்சம் பற்றிய கருத்துகள் வரிசையாக தரப்பட்டுள்ளன. உலகின் முதல் சிவன் கோவில் ராமநாதபுரம் மாவட்டம் உத்தர கோசமங்கை மங்களநாதர் திருக்கோவில் என குறிப்பிடுகிறார்.
இந்தியாவின் மிகப்பெரிய கோவில் சோழர்கள் கட்டிய திருவாரூர் தியாகராஜர் கோவில் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அஷ்டமுக சிவலிங்கம், மணல், கல் சிற்பம், கேரளாவின் மீன்குளத்தி பகவதி அம்மனே மதுரை மீனாட்சி என்றும் சுட்டப்பட்டுள்ளது.
பிரபஞ்சத்தின் பிம்பங்களால் ஏற்படும் மாற்றங்களே தற்போது உள்ள தொழில் நுட்பமும் விஞ்ஞான வளர்ச்சியும்; இருப்பதை வைத்து சிறப்பாக வாழ்வதே சிறப்பு என்பதை மையப்படுத்தும் நுால்.
–
புலவர் சு.மதியழகன்