சாகசங்களுடன் விறுவிறுப்புகள் நிறைந்த சுயசரிதை நுால். அண்டை நாடான திபெத் இமயமலைப் பகுதியின் உறைபனியில் வாழும் முறையை வெளிப்படுத்துகிறது. திபெத்தில் லாமாக்களின் வாழ்க்கை மிகவும் வித்தியாசமானது. சாகசங்கள் நிறைந்தது. குழந்தை பருவத்திலே இந்த வாழ்க்கைக்கு பழக்குவதை காட்சி பூர்வமாக விவரிக்கிறது.
சீன அரசுக்கு பயந்து, ஐரோப்பிய நாடு ஒன்றில் மறைந்து வாழும் லாமா, தன் வாழ்வு அனுபவத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார். இவர் திபெத் அரசில் முக்கிய பொறுப்பு வகித்த குடும்பத்தில் பிறந்தவர். நம்ப முடியாத சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. நுட்பமான தகவல்கள் தரப்பட்டுள்ளன. தனித்துவமான உணவு, பயிற்சி முறைகள், மத நம்பிக்கை, மடாலய வாழ்வு முறை, தீட்சை, நெற்றிக்கண் திறப்பு என வினோதமாக தகவல்கள் தரப்பட்டு உள்ளன. எளிய மொழி நடையில் வியப்பு ஏற்படுத்தும் சுயசரிதை நுால்.
– ஒளி