கிறிஸ்துவ பொதுமறை பைபிளுக்கு அடுத்து, அதிக அளவில் உலக மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ள நுாலான திருக்குறள் குறிப்பிடும் கோட்பாடுகள் பற்றி விரிவாக ஆராய்ந்து கருத்துகளை தம் நுால். தகவல்கள், 36 தலைப்புகளில் உள்ளது.
திருக்குறளில் சொல்யுள்ள கருத்துகளை தெளிவாக வகை பிரித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. திருக்குறளில் உள்ள மதம் சாராத தமிழ்நெறி, அது புறக்கணிக்கும் கோட்பாடு, அது உரைக்கும் வாழ்வியல் கோட்பாடுகள் விரிவாக சொல்லப்பட்டு உள்ளன.
புறங்கூறாத கோட்பாடு, தெய்வக்கோட்பாடு, விதிமறுப்பு கோட்பாடு, காதல் கோட்பாடு என, பல்வேறு கோட்பாடுகள் உள்ளதை தெளிவாக வரையறை செய்துள்ளது. திறக்குறள் மற்றும் திருவள்ளுவர் குறித்து விரிவாக ஆராய்ந்து தகவல்களை தொகுத்து தரும் நுால். தேடல்களுக்கு விடை சொல்லும் வகையில் உள்ளது.
–
ஒளி