பாவேந்தர் பாரதிதாசனின் பாடல்களில் சமூக, அரசியல் மற்றும் பண்பாட்டுச் சிந்தனைகளை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கிலான கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
பாரதிதாசன் கவிதைப் படைப்புகளில் உள்ள சமூகச் சிந்தனைகள், கடந்த நுாற்றாண்டில் நிலவிய சமூக அரசியல் சூழல்களை படம் பிடித்துக் காட்டுகின்றன. பெண் கல்வி, மறுமணம், குடும்பம், கற்பின் சிறப்பு, சமூக நீதி, சமத்துவம் போன்ற பார்வைகளில் பாவேந்தர் எழுதிய வரிகள் விளக்கப்பட்டுள்ளன.
மூட நம்பிக்கை, சாதி ஏற்றத்தாழ்வு, சமுதாய மறுமலர்ச்சி, வறுமை ஒழிப்பு, உழைப்பாளர் நலன், சுயமரியாதை கருத்துக்களை உடைய எழுச்சிக் கவிதை வரிகள் சுவைபட விவரிக்கப்பட்டுள்ளன. முற்போக்கு சிந்தனையை அறிமுகப்படுத்தும் நுால்.
–
கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு