மவுரிய பேரரசில் புகழ்பெற்ற மன்னர் அசோகரின் செயல்பாடுகள் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். புத்தக துறவியாக இருந்து கொண்டே, மாமன்னராகவும் பதவி வகித்த விபரத்தை விவரிக்கிறது.
மவுரிய வம்சத்தில் அசேகரின் ஆட்சி வரிசையை வரலாற்று பூர்வமாக சிறப்பாக எடுத்துரைக்கிறது. கலிங்கப் போரில் ஏற்பட்ட திருப்பம், மனமாற்றம், தொடர்ந்து பவுத்த சமயத்துக்கு ஆற்றிய தொண்டுகள் பற்றிய விபரங்களை தொகுத்து தருகிறது.
வரலாற்றில் அசோகர் விட்டுச் சென்ற அரிய தடயங்களை பதிவு செய்துள்ளது. நாட்டில் அரியணையில் அமர்ந்திருந்த போது அதிகாரம் செலுத்திய விதம் பற்றியும் விவரிக்கிறது. மாமன்னர் அசோகரின் மாட்சிகளை அறிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள வரலாற்று நுால்.
–
மதி