ஜனக மகாராஜாவிற்கு மகரிஷி அஷ்டாவக்கிரர் அருளிச் செய்த ஞான உபதேசங்கள் எளிய தமிழில் வசனக் கவிதைகளாக அமைந்துள்ள நுால். ஞானத்தை தேடும் முகமாக உபதேசங்களை விளங்குகிறது.
உடல், மனம் என்ற மாயையை விடுத்து ஆன்மாவை தியானி. ஆசையை ஒழித்து, வருவதை எவனொருவன் ஏற்கிறானோ அவனே முழுமை எய்துகிறான். ஆசையற்றவன் சுதந்திரமானவன்; தளையிலிருந்து விடுபட்டவன். மானம், அவமானம் அவனைப் பாதிப்பதில்லை என அருளியது கூறப்பட்டுள்ளது.
‘ஞானக் குறடால் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து அபிப்ராயங்கள் என்னும் முட்களை களைந்து விட்டேன். உன்னத நிலை அடைந்து விட்டேன்...’ என சீடர் ஜனகர் குருவாகிய அஸ்டாவக்கிரரிடம் கூறுவதாக நிறைவடைகிறது. அத்வைத கோட்பாடுகளை எளிமையாக தரும் நுால்.
–
புலவர் சு.மதியழகன்