தேசியமும், தெய்வீகமும் கலந்து பசும்பொன் தேவர் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஆவணக் காப்பகத்தில் பல ஆண்டுகள் சேகரித்து உருவாக்கப்பட்டுள்ளது. பாரதியைப் போன்றே சக்தி வழிபாட்டில் ஈடுபாடு கொண்டவர் தேவர் என்பதை முதல் கட்டுரை விளக்குகிறது.
வேலுார் சிறையில் தேவர், நேதாஜியுடன் தொடர்பு, தேவரின் பெருநாழி, உசிலம்பட்டிப் பேச்சுக்கள், பாஸ்கர சேதுபதி –பசும்பொன் தேவர் ஒப்பீடு என பல தகவல்களை உள்ளடக்கியுள்ளது.
அவரது பல்வேறு பரிமாணங்களை விளக்குகிறது. எளிய நடையில் அழகிய வடிவமைப்புடன் அமைந்துள்ளது. தேவரைப் பற்றி அறிய விரும்புவோருக்கு விருந்தளிக்கும் நுால்.
–
முனைவர் இரா.பன்னிருகை வடிவேலன்