தனிமனிதன் மற்றும் சமூக ஒழுக்கத்துக்கு முதன்மை தரும் இதிகாச கதையான ராமாயணம் எளிய உரைநடையாக தரப்பட்டுள்ள நுால். ராமாயண காவிய கதை, பல வடிவங்களில் கிடைக்கிறது. பலருக்கு தெரிந்த கதையாக இருந்தாலும், காலந்தோறும் புதுமை படைக்கிறது. அந்த வகையில் வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு, உரைநடையாக இந்த நுால் உருவாக்கப்பட்டு உள்ளது. கம்ப ராமாயண கருத்தையும் ஒப்பீடாக பயன்படுத்தியுள்ளது.
கவிஞர் வாலி எழுதிய, ‘அவதார புருஷன்’ கவிதை நுாலில் இருந்து, பொருத்தமான இடங்களில் வரிகள் எடுத்தாளப்பட்டுள்ளன. அவை சுவாரசியம் தந்து வாசிப்பை விரைவுபடுத்துகிறது. அரிய செய்திகள் மிக கவனமாக தொகுத்து தரப்பட்டுள்ளன. ராமாயணக் கருத்தை படித்து உள்வாங்க எளிய நடையில் உருவாக்கப்பட்டுள்ள நுால்.
–
ராம்