மனித அன்பை விவரிக்கும் ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு நுால். கள்ளம் இல்லாத மனதை, நதி, வனத்துடன் ஒப்பிடுகிறது. வார்த்தைகளில் மறைந்துள்ள ஒலியை மவுனமாக விளக்குகிறது. முகவரி இல்லாவிட்டாலும், அஞ்சல் பெட்டியில் அமரும் குருவி குறித்து பேசுகிறது.
மரம் உயரமாக வளர்ந்தாலும் பனித்துளிக்கு புகலிடம் புல் தான் என்கிறது. மரங்களின் நிழல் ஒன்றோடு ஒன்று முத்தமிட்டு மகிழ்வதை அன்பால் வர்ணிக்கிறது. விற்காத புல்லாங்குழலுடன் வீடு திரும்பும் கண் மவுனத்தை கலையாமல் பேசுகிறது. சிறுவனின் பசி தெரியாமல் தொடரும் நாயின் பசியை சொல்கிறது. ஒவ்வொரு கவிதையும் வாழ்வுடன் பொருத்தி பார்க்க வைக்கிறது.
–
டி.எஸ்.ராயன்