சமூக நிகழ்வுகளை மையமாக்கி படைக்கப்பட்டுள்ள நாவல்.
பரோபகாரியாக வாழ்ந்த குடும்பம், மருத்துவ முகாம், ரத்த தான முகாம் என பிரமுகர்களை அழைத்து விழா நடத்துகிறது. கடன் தந்து உதவி, வறுமையில் வாடும் இளம் பெண்களை வாழ வைக்க முயல்கிறது.
அதே நேரம் இதன் இன்னொரு முகமும் வெளிச்சத்திற்கு வருகிறது. அந்த குடும்பத்தின் கொடுமைகளை கண்டு கொதித்தெழுந்த ஆசிரியை, இளைஞர்களை திரட்டி கலைநிகழ்ச்சிகள் நடத்தி எழுச்சி ஊட்டுகிறார். கொடுமைக்காரனுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது.
வஞ்சிக்கப்பட்டவர்களின் வேதனை, வலி, கண்ணீர் என விறுவிறுப்பாக திருப்பங்களுடன் உள்ளது. சமூகத்தில் படிந்துள்ள கறைகளை சலவை செய்யும் நுால்.
-– புலவர் சு.மதியழகன்