மதுக்கார நாச்சி அம்மனை புகழ்ந்து பாடப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். அம்மன் பற்றி, ‘நாச்சம்மை, நாச்சியார், நாச்சியம்மன் நாவினிக்கும் பெயர்கள் பலவற்றில் அடைமொழியாய் மதுக்காரி ஆளுகின்றாள் செவலுார் திருமண்ணில்’ என துவங்குகிறது.
தங்கமகள் மதுக்காரி, மதுக்காரிக்கு ஒரு விண்ணப்பம், என்றும் துணை நீயே, ஆரோக்கிய தேவி என பல தலைப்புகளில் புனையப்பட்டுள்ளது. சித்தர்பீடம் இதழில் வெளியான கவிதைகளின் தொகுப்பு நுால். – மதி