மரபுக் கவிதை நடையில், 100 கவிதைகளைக் கொண்ட நுால். கொரோனா ஊரடங்கால் விவசாயிகள் விளைபொருட்களை விற்க முடியாமல் தவித்தது பற்றி கூறப்பட்டுள்ளது. ‘முள்ளு மேல சீல’ கவிதையில், மதுக் கடைகளால் அழியும் குடும்பங்கள் நிலை குறித்து பேசப்பட்டுள்ளது. வகுப்பறையில் அலைபேசியை தவிர்த்த நிலை மாறி, கொரோனா காலத்தில், ‘ஆன்லைன்’ வகுப்புகளுக்கு பயன்பட்ட நிலையை, ‘மாற்றம்’ என்ற கவிதையில் பதிவு செய்துள்ளது.
கல்லுாரியில் மாணவர்கள் சந்திக்கும், ‘ராகிங்’ பிரச்னைக்கு தீர்வு கூறியுள்ளது சிறப்பு. ‘பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா’ என பதிவு செய்துள்ளது புது ரகம். நிகழ்கால உண்மையை காட்டுகிறது, ‘விருது வாங்கலையோ விருது’ கவிதை.
படிக்க துாண்டும் கவிதைகளின் தொகுப்பு நுால்.
– முகில் குமரன்