மனிதனின் அவஸ்தை, அபிலாசை, ஏக்கங்களை வெளிப்படுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மெல்லிய உணர்வுகளை கதாபாத்திரங்கள் வழியாக துல்லியமாக பதிவு செய்கிறது.
ஷணப்பித்தம், விரக்தி, குமிழி, இரவில், தாலாட்டு, திரிசங்கு சொர்க்கம், வாழ்விற்கே ஒரு நாள் என்ற தலைப்புகளிலான சிறுகதைகளை உடையது. இறுதியில், எழுத்தாளரின் சுருக்கமான வாழ்க்கை குறிப்பும் தரப்பட்டுள்ளது. சிறுகதைகள் ஒன்றைப் போல் மற்றொன்று இல்லை.
ஒவ்வொன்றும் மனிதர்களின் வித்தியாசமான குணச்சித்திரங்களை காட்டுகின்றன. நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. எதிர்பாராத திருப்பங்களை கொண்டுள்ளன. எதார்த்த வாழ்வை அழகியலோடு வெளிப்படுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
– மதி