எங்கும் இறைவன் என்ற எண்ணம் தான் நம்பிக்கையின் உச்சம் என்பதை உணர்த்தும் நுால். இந்த எண்ணம் எழுந்தால் வாழ்வில் மகிழ்ச்சி நிறையும்; தரிசு நிலத்தைப் பண்படுத்திப் பயிரிட்டு, பலன் அனுபவிப்பதைப் போல் இன்பம் நிறையும்.
எழுபது வயதில் வாழ்கிறவர், இருபதைக் கடந்ததை உணர வேண்டும். இருபது வயதில் வாழ்கிறவர், ஒரு நாள் எழுபதை எட்டுவோம் என எண்ண வேண்டும். எண்ணம் போல் வாழ்க்கை என்ற உண்மை உணர்த்தப்பட்டுள்ளது.
உலகம் ஒருபோதும் மொத்தமாக அழிந்ததில்லை. அறிந்த பகுதிகளின் அழிவைப் பார்ப்பது முழுமை இல்லை என தோன்ற வேண்டும். அது, வாழ்வின் உண்மைப் பொருளை தெளிவாக்கும். இத்தகைய சிந்தனைகளை வெளிப்படுத்தும் கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். எண்ணத்தை கவரும்.
– முகிலை ராசபாண்டியன்