கொங்கு சமுதாய வாழ்வின் ஒரு பகுதியை நீண்ட நெடிய வரலாற்று புதினமாக ஆவணப்படுத்தியுள்ள நுால். கல்வெட்டு, செப்பேடு வரலாற்று செய்திகளை சான்றாதாரமாக கொண்டுள்ளது.
நல்லதம்பி கவுண்டர், செங்கோட கவுண்டர், பார்வதி, பொன்னம்மாள், கதை நாயகன் சூரியா போன்ற பாத்திரப்படைப்புகள் மூலம் திருப்பங்களுடன் நகர்கிறது. நல்லம்மாள், வள்ளி என்ற கன்னிப் பெண்களின் சூளுரையால் துன்பம் நிறைந்த மாற்றங்களை சொல்கிறது.
கொங்கு மக்களின் மான உணர்ச்சி, குல ஒற்றுமை, மனப்புழுக்கத்தை வெளிப்படுத்துகிறது. வருணனை, நயவுரைகள், இலக்கிய மேற்கோள்கள், கொங்கு சமுதாய வரலாற்றில் அறியப்படாத செய்திகளை சொல்கின்றன.
கொங்கு வேளாளர்களின் குலப் பெருமையை விளக்கும் வரலாற்றுப் புதினம்.
– புலவர் சு.மதியழகன்