இருபது ஆண்டில், வெவ்வேறு காலக்கட்டத்தில் எழுதிய கதைகளின் தொகுப்பு நுால். தற்போதைய சூழலுடன் பொருந்தி ஆச்சர்யம் வரவழைக்கிறது.
கணவரின் குடும்ப நிலை உணராமல், நண்பர் வீட்டை பார்த்து, ‘நீங்களும் இருக்கிறீர்களே’ என பேசும் மனைவியின் செயலை, ‘லட்சியவாதி’ கதை உணர்த்துகிறது. உறவுகள் புரியாத நிலையில், மூன்றாவது முறை கர்ப்பமாகி கனல் பார்வையை, அக்கறையாக மாற்றும், ‘ரிசல்ட்’ கதை, பெண்களின் வலியை பேசுகிறது.
மனதில் உறுதி வேண்டும், அடையாளம், அவரவர் நியாயங்கள், உறுதி, வலி போன்ற கதைகள், தன்னம்பிக்கையை துாண்டுகின்றன. பணத்தேவை, பேராசையால் ஏற்படும் பக்கவிளைவுகளை கூறுகின்றன. கதை எழுத முயற்சிப்போருக்கு உதவும் நுால்.
– டி.எஸ்.ராயன்