மனதிற்கு இனிமை சேர்க்கும் பாடல்களின் தொகுப்பு நுால். கூற வந்த கருத்தை கொண்டு சேர்க்கும் தன்மை உடையதாக உள்ளன. வள்ளுவர், வ.உ.சி., காமராஜர் போன்ற தலைப்புகளிலும், முக்கிய நாட்கள், பொதுவான சிந்தனைகள் போன்ற பொருள்களிலும் அமைந்து சுவையூட்டுகின்றன.
யாவும் இலக்கிய வட்டம், கவிதை இரவு, தாய்மண் போன்ற இலக்கிய அமைப்புகள் நடத்திய நிகழ்வுகளில் பங்கேற்ற கவிஞர் அளித்தவை. சமூகத்தை சீர்திருத்தும் வகையில் அமைந்த பாடல்கள், எளிய நடையில் இனிமையாக புனையப்பட்டுள்ளன. எதுகை, மோனை, உவமை, உருவகம் என இலக்கண வளம் சேர்ந்து சுவை நயம் பெறுகின்றன. பாடி மகிழத்தக்க இசை நயமுள்ளவை.
சிந்திக்க வைக்கும் பாடல்களின் தொகுப்பு நுால்.
– முனைவர் ரா.பன்னிருகைவடிவேலன்