மேடையில் அரங்கேறிய நாடகம், அச்சு வடிவம் கண்டிருக்கிறது. அந்தக் காலத்தில் மோதல்கள் நடந்து இருக்கின்றன. கடவுள் நம்பிக்கை ஜெயித்திருக்கிறது என விறுவிறுப்பாக காட்டுகிறது.
பசும்பாலும் வெள்ளையாக இருக்கிறது; கள்ளிப்பாலும் வெள்ளையாகத்தான் இருக்கிறது. முன்னதை சாப்பிட்டால் நல்லது. பின் சொல்லி உள்ளதை சாப்பிட்டால் என்ன ஆகும்... என்பது மாதிரி வசனங்களை உடையது.
பெண் பித்து பிடித்த தந்தை, மகனின் காதலியை மணக்கத் துடிக்கிறார். இத்தனைக்கும் பெற்ற மகன் டாக்டர். கிளினிக்கில் கர்ப்பிணியை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டி, மகனை சிறைக்கு அனுப்பி வைப்பது ஒரு பக்கம். அரசியல்வாதியாகி தேர்தலில் ஜெயிப்பது மறுபக்கம் இப்படி அமைக்கப்பட்டுள்ள நுால்.
– சீத்தலைச் சாத்தன்