மதுரை மண்ணின் சிறப்பையும், மக்களின் அன்பையும் உணர்த்தும், 28 சிறுகதைகள் உடைய நுால். முதலாவதாக, ‘பிடிகயிறு’ சிறுகதை, ஜல்லிக்கட்டின் போது மிரண்டு சென்ற காளையை தேடும் இளைஞன், தன் தந்தையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை அரவணைப்பதை கூறுகிறது.
ஒரு கல்லுாரிக் காதல் கதையை, ‘இன்னுமொரு காதல் கதை’ சிறுகதை காட்டுகிறது. கல்லுாரியில் படிக்கும் போது காதலிக்கும் ஜோடியின் காதல் விவகாரம், பெண்ணின் வீட்டிற்கு தெரிந்து விடுகிறது.
அந்த இளைஞன் தன் காதலியின் வீட்டிற்குச் சென்று, அவளது தந்தையிடம் சாதுர்யமாக பேசிவிட்டு வருகிறான். அடுத்த நாள் என்ன நடந்தது என்ற சுவாரசியத்துடன் முடிகிறது.
திருமங்கலம், தீபாவளி, தழும்பு, பெரியாம்பளை உள்ளிட்ட சிறுகதைகள் ரசிக்கும் ரகம்.
– முகில் குமரன்