இனிய தமிழ் சுவையுடன் மனதுக்கு உகந்த கருத்துக்களை எளிய கவிதைகளாக்கி தொகுத்துள்ள நுால். மனித மனதையே படம் பிடித்து காட்டுவதாக உள்ளன. கடமைகளை நினைவூட்டி, வாழ்வின் அர்த்தத்தை உணர வைக்கின்றன. தோல்விகள், துயரங்கள் இருந்தாலும் நம்பிக்கையுடன் வாழ இயலும் என்பதை பறைசாற்றுகின்றன.
குழந்தை பருவத்தையும், இளைஞர்களின் நிலையையும், லட்சியக் கனவுகளாக கருத வேண்டியவற்றையும், ஆசிரியர்களின் கடமைகளையும், உழவைப் போற்றவும், இயற்கையை பேணுவதன் அவசியத்தையும் சுருக்கமாக பாடியிருப்பது சிறப்பு.
அனுபவித்த இளமைக்காலத்தை முன்னிறுத்தி மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளது. படிப்பவர்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கும். கவிதை மனதை எளிமையாக வெளிப்படுத்தும் தொகுப்பு நுால்.
– வி.விஷ்வா