சிந்திக்க துாண்டும் வகையில் எழுதப்பட்டுள்ள சமூக நாவல் நுால். முற்பகலில் செய்வது பிற்பகலில் விளையும் என்ற மையக்கருத்தை அடிப்படையாக உடையது.
நல்ல கருத்தை உள்வாங்க வேண்டும் என உருவாக்கப்பட்டுள்ளது. தவறு செய்தால், துரோகம் நினைத்தால் அதன் விளைவு என்ன என்பதை உணர்த்துகிறது. கதாபாத்திரங்களின் செயல்பாடு வழியாக, தப்பு மற்றும் சரி எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வு நின்று போவதில் துவங்கி விறு விறுப்புடன் பயணிக்கிறது. வேதனை, அனுதாபம், அவநம்பிக்கை என உணர்வுகள் மாறி மாறி வந்து போகின்றன. துரோகத்துக்குரிய தண்டனையை மிக எளிமையாகக் காட்டுகிறது.
தவறு செய்தவனை தனிமைப்படுத்துவது மிக உச்சமான தண்டனை என்பதை உரைக்கிறது. மனதில் நிழலாடும் கதாபாத்திரங்களை உடைய நுால்.
– ராம்