பெண்ணின் பெருமையை பற்றி பேசும் குடும்பக்கதை நுால். சமுதாய நலம், பெண் பெருமையை விளக்கும் விதமாக அமைந்துள்ளது.
ஒரு தமிழ் ஆசிரியரின் குடும்பச் சூழலை மையமாக வைத்து உலா வருகிறது கதை. இவரது மனைவி இக்கதையின் கருவூலமாக விளங்குகிறார். கணவனுக்கு ஏற்படும் இடர்ப்பாடுகள் தடைகள் நீங்க நல்லதொரு முடிவை கூறி, இல்லறத்தை நன்றாக நடத்தி செல்வதை குறிப்பிடுகிறது.
குழந்தை படிப்பு, வீட்டுக் கடன், கல்விக் கடன் என அனைத்து சவால்களையும் கதையில் காண்பித்தது மட்டுமின்றி, அதை நேர்த்தியாக சமாளிக்கும் விதத்தையும் சொல்லும் விதம் பாராட்டிற்குரியது. மருத்துவ உதவி, காப்பீடு பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளன. மனைவியே நல்ல துணைவி என உரைக்கும் நுால்.
– வி.விஷ்வா