சோழ பேரரசின் வீரமிக்க வரலாற்றை சொல்லும் புதினத்தின் இரண்டாம் பாகம். கல்கி விட்டு சென்ற இடத்தில் துவங்கி பயணிக்கிறது.
ராஜ ராஜனாகிய அருள்மொழி வரலாறு படைக்கும் திறம் வடிவமைக்கப்பட்டுள்ளது. காந்தளூர்ச் சாலை போர், கொல்லம் படையெடுப்பு, கங்கப்பாடி, தடிகைப் பாடி, நுளம்பப்பாடி ரேணிகுண்டா உள்ளிட்ட படையெடுப்புகள், ஜடாசோடனோடு நடந்த போர்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
ராஜேந்திர சோழன் திருமணம், சக்திவர்மன் திருமணம், விஜயவாணன்- காதம்பரி திருமணம், விமலாதித்தன்- குந்தவை திருமண நிகழ்வுகள் வருணிக்கப்பட்டுள்ளன. கரிகாலன் கொலை பற்றி நந்தினி வெளியிட்ட மெய்சிலிர்க்கும் ரகசியமும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
– புலவர் சு.மதியழகன்