தமிழகத்தில் உரிமை கோரப்படாத நிலம் பற்றி விளக்கும் நுால். அரசு திட்டமிட்டால் இதை புறம்போக்காக மாற்றிக்கொள்ள வகையுள்ளது என்ற தகவலை உரைக்கிறது. தமிழகத்தில் பல்வேறு நில வகைப்பாடுகள் உள்ளன. அவற்றில் அனாதீனம் என்பதும் ஒன்று. இந்த நிலம் தொடர்பான தகவல்கள், எளிய நடையில் விளக்கப்பட்டுள்ளன.
நில உடைமை என்ற பட்டா இல்லாத இடத்தை, இது போல் வகைமைப் படுத்தியுள்ளதாக கூறுகிறது. இதை, புறம்போக்கு என்ற வகைமையில் எளிதாக மாற்ற முடியும் என்கிறது. இந்த நிலத்தில் உரிமை கோர முடியுமா என்பது பற்றியும் விவரிக்கிறது. இந்த நிலத்துக்கு ஆவணப் பத்திரம் இருந்தால் பட்டா பெற முடியுமா என்ற கேள்விக்கும் பதில் தருகிறது. முக்கிய நிலப்பிரிவு தொடர்பான தகவல்களை உடைய நுால்.
– ராம்