ஹிந்தி மொழியை எளிதாக கற்றுக்கொள்ள உதவும் பாடங்களை உடைய நுால். எழுத்து மற்றும் ஒலிக்குறிப்புகளுடன் சிறப்பாக தரப்பட்டுள்ளன.
முதலில் ஹிந்தி மொழியின் எழுத்துகளை அறிமுகம் செய்கிறது. தொடர்ந்து ஒலிக்குறிப்புகள் பற்றி உள்ளது. பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியை புரிந்து கொள்ள வகை செய்யும் நிலையில் விளக்கியுள்ளது.
வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களைக் கொண்டு, சிறிய தொடர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை தமிழிலும், ஹிந்தி உச்சரிப்பு முறையிலும் தெளிவாக தரப்பட்டுள்ளன. எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. மொழியை எப்படி புரிந்து செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்று மிக நுட்பமாக கற்பிக்கும் நுால்.
– ராம்