களப்பிரர் ஆட்சி இருண்ட காலம் என்பதை மாற்றி, இலக்கிய மறுமலர்ச்சிக் காலம் என குறிப்பிடும் நாவல். கதை சொல்லும் பாங்கில் காட்சிகளை அமைத்துள்ளது.
வேதங்கள், ஸ்லோகங்கள், கல்வெட்டுகளை ஆதாரமாகக் கொண்டு, வீர வரலாற்றை விளக்கும் காவியமாக அமைந்துள்ளது.
கடம்பன் என்ற இளைஞன் சூழ்நிலை காரணமாக இளவரசியின் பல்லக்கைத் துாக்குகிறான். இவன் தொடுக்கும் வினாக்கள் அறிவு பூர்வமிக்கவை. கடம்பனே நாவலின் கதாநாயகனாக அமைந்து துணை புரிகிறான்.
மனிதருள் வேறுபாட்டை நீக்கி அனைவரும் ஒரே இனம் என்ற கோட்பாட்டை விளக்குகிறது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற நீதியை நிலைநாட்ட முயல்கிறது. அடுத்து என்ன நிகழுமோ என்ற திகில் தந்து நகரும் நுால்.
– பேராசிரியர் ரா.நாராயணன்