பள்ளி வளாகத்தில் கல்வி தொடர்பாக ஏற்பட்ட அனுபவங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். மாணவியருக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியை பணியின் போது, வகுப்பறை, பள்ளி வளாகத்தில் நடக்கும் சம்பவங்களை உற்று நோக்கி எழுதப்பட்டுள்ளது. இயலாத மாணவியருக்கு உளவியல் ரீதியாக ஏற்படும் சிக்கல்களை போக்கும் நடைமுறையை உடையது.
கற்பதற்கான சூழலில் ஏற்படும் தடங்கல்களை ஆராய்கிறது. சம்பவங்களை கூர்ந்து நோக்கி, சிறுகதை போல் தந்துள்ளதால் வாசிக்க எளிமையாக உள்ளது. மாணவியருக்கு தன்னம்பிக்கை ஊட்டி, அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் வழிமுறைகளை கொண்டுள்ளது. கற்பிக்கும் இடங்களில் ஏற்படும் பிரச்னைகளை முறையாக அணுகி தீர்வுக்கு வழிவகுக்கும் நுால்.
– மதி