இலக்கிய மணம் இழையும் வரலாற்று நாவலின் ஐந்தாம் பாகமாக மலர்ந்துள்ள நுால். சோழ மன்னன் ராஜேந்திரன் தலைநகரைத் தஞ்சையிலிருந்து, கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றிய நிகழ்வு, அங்கு கோவில் கால்கோள் விழா, பரவை நாச்சியார் நாட்டியம் பற்றி விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
திருக்கோவில் எழுப்புவதற்கான அமைப்பு முறைகள் வரைபடத்துடன் காட்டப்பட்டுள்ளது. நடனக் கலையின் நுட்பங்களும், இசை மரபும், பண்களும், தாள வகைகளும் துல்லியமாக விவரிக்கப்பட்டுள்ளன. நாடகத் தமிழோடு தொடங்கி முத்தமிழ் காவியமாக இலங்குகிறது. மன்னர் குடும்பத்தில் நிகழ்ந்த திருமணங்கள் பற்றியும் சித்தரித்துள்ளது. சான்றுகளை ஆய்ந்து எழுதப்பட்டுள்ள நாவல் நுால்.
– புலவர் சு.மதியழகன்