பார்த்த, கேட்ட நிகழ்வுகளை பாத்திரமாக்கி படைக்கப்பட்ட சிறுகதை தொகுப்பு நுால்.
‘அம்மாவை வெறுக்கும் பிள்ளைகள் இருக்கலாம்; பிள்ளைய வேணாம்ணு ஒதுக்கும் அம்மா இருக்க முடியுமா’ என கேட்கும் தாயின் பாசத்தை, ‘பால்காரம்மா’ கதை கொடுக்கிறது.
சினிமா இயக்குனருக்கு பிடிவாதம் இருக்கக்கூடாது; மற்றவர்கள் நிலை அறிந்து செயல்பட வேண்டும் என, ‘தனி இருக்கை’ கதை உணர்த்துகிறது.
நண்பனின் மனைவி இறப்பின் தவிப்பை விளக்கும், ‘தோழமை’ கதை பலரின் அனுபவம். ஒவ்வொரு கதையும், உணர்வுகளை மையப்படுத்துகிறது.
– டி.எஸ்.ராயன்