மத்திய ஆட்சி பொறுப்பில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் வரலாற்றை உரைக்கும் நுால். கொள்கை ரீதியாக துவங்கிய காலத்தில் இருந்து பதிவு செய்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சி, 1980ல் துவங்கப்பட்டது. இதன் கொள்கை, 1857ம் ஆண்டிலேயே உதித்து விட்டதாக ஆவணங்களுடன் விளக்குகிறது. இந்தியா மீது படை எடுத்த கில்ஜி, முகலாயர் மற்றும் ஆங்கிலேயரை எதிர்த்த அமைப்புகளே இதன் முன்னோடிகள் என்கிறது.
பின், பாரதிய ஜன சங்கமாகி, கட்சியாக உதித்த வரலாறை சுவைபட தெரிவிக்கிறது.
துவக்கத்தில் இரண்டே எம்.பி.,க்களை கொண்டிருந்து, படிப்படியாக ஆட்சியை பிடித்த உத்தியை பதிவு செய்துள்ளது.
பா.ஜ., கட்சியின் வரலாற்று பாதையை எளிய நடையில் சொல்லும் நுால்.
– மதி