மு.வ., இளங்கோ, கம்பர், குமரகுருபரர் படைப்புகளை அறம், அன்பு என்ற நோக்கில் ஆராய்ந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஆசிரியர், எழுத்தாளர், சான்றோர் எனப் பல நிலைகளில் வடிக்கப்பட்டுள்ளன.
திவ்யப்பிரபந்தம் என்பதற்குத் தெய்வத்தன்மை உள்ள மேலான நுால் என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. அதே நேரம், ‘ராமவதாரம் தோன்றிய வரலாறு’ கட்டுரையில் கம்பருக்கு வரலாறு இல்லை என வருந்துகிறது.
கம்பன் கழகங்கள் தோன்றிய வரலாற்றை எடுத்துரைக்கிறது. எழுத்துச் சீர்திருத்தம், மொழிப் பயிற்சி என்ற கட்டுரைகள் தமிழ் மொழிக்கு ஆக்கம் சேர்க்கும் வழிவகைகளைக் கூறுகின்றன. எளிய நடையில், தெளிவான கருத்துகளை முன்வைத்துள்ள நுால்.
– முனைவர் ரா.பன்னிருகைவடிவேலன்