தனியார் நிறுவன பொறுப்பாளரின் உண்மை காதலை வெளிப்படுத்தும் வித்தியாசமான நாவல் நுால்.
நிறுவன வளர்ச்சிக்கு பாடுபடும் அதிகாரியின் காதலியும் அங்கே பணிபுரிகிறார். பணியைத் தாண்டி உண்மை அன்பு உதயமாகிறது. உயரதிகாரி, அண்ணனாக கருதும் கிரிக்கெட் பயிற்சியாளர், காதல் தோல்வியால் அவதிப்படுகிறார். அவரை நன்றாக கவனித்து கொள்கிறார் உயரதிகாரி.
இறுதியில் கிரிக்கெட் பயிற்சியாளரும் அவரது முன்னாள் காதலியும் சந்தித்து ஒரு முடிவை எடுப்பது சுவாரசியத்தை அதிகரிக்கிறது. உயரதிகாரியின் வாழ்க்கையில் உண்மை நிலைய உணர்த்துகிறார் ஒரு மீனவர். அதை வழிகாட்டுதலாக எடுத்துக் கொண்டு வாழ்க்கையை மாற்றி அமைக்க துணிவது ரசிக்கும்படி கூறப்பட்டுள்ளது. சுவாரசியமான நாவல்.
– முகில் குமரன்