தமிழர் கட்டிடக் கலையை விவரிக்கும் நுால். கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களே நிலைத்து நிற்பதாக கூறுகிறது.
பல்லவர், சோழர், பாண்டியர், விஜயநகர கட்டடக் கலையை அழகாக கண்முன் கொண்டு நிறுத்துகிறது. காஞ்சி, மதுரை, தஞ்சை, திருவாரூர், ராமேஸ்வரம் போன்ற கடற்கரை கோவில்களின் கலை நயத்தை விவரிக்கிறது. பத்மநாபபுரம், தமுக்கம், கலங்கரை விளக்கம், நீர்த்தேக்கங்கள் இன்றும் பேசப்படும் காரணத்தை சுட்டிக்காட்டுகிறது. கட்டடங்களுக்கு பயன்படுத்திய மூலப்பொருட்கள், கட்டமைப்பு தரத்தால் ஆயுள் அதிகரித்ததை சொல்கிறது.
நிலத்தின் தன்மைக்கு ஏற்ப, கட்டப்பட்ட குடியிருப்புகளை கூறுகிறது. வீட்டை பழமை மாறாமல் பராமரிக்க விரும்புவோர் வாசிக்க வேண்டிய நுால்.
– -டி.எஸ்.ராயன்