பகவத் கீதையை எளிய நடையில் எடுத்துக்காட்டுகளுடன் தந்துள்ள உரைநுால். படித்தால் மன அமைதி, தைரியம், ஆத்ம ஞானம் கிடைக்கும் என்கிறது.
கீதை படித்தால், அற்புதமான அர்த்தங்கள் கிடைக்கும். நல்ல நடத்தை உண்டாகும்; சந்தேகங்கள் நீக்கும் அகராதியாக உதவும். பிறப்பும்-, இறப்பும் நிச்சயம் என்பதை திருக்குறள், ஷேக்ஸ்பியரின் கிங்லியர் நாடக வசன மேற்கோளுடன் கீதை வாக்கியத்தை விளக்குகிறது.
இறைவன் தக்க சமயத்தில் பலன் தந்து கணக்கை சரி செய்கிறான் என்பதை விளக்குகிறது. துறவு என்பது செய்ய வேண்டியதை பலன் கருதாது, அலட்சியம் இல்லாமல் முறையாகச் செய்து முற்றிலும் மறந்து அமைதியடைவது தான் என்று உரைக்கும் நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து