வீரசைவம் பற்றி விரிவான விளக்கங்கள் உடைய நுால். பிரதம பரிச்சேதம், த்விதிய பரிச்சேதம், அந்நியக்கதை என்ற பிரிவுகளில் நெறி விளக்கங்களை விரித்துரைக்கிறது.
குரு வணக்கம், இட்டலிங்க வழிபாடு, சங்கமர் வழிபாடு, உருத்திராக்கம், திருநீறு, அடியவர் பெருமை, பிரசாதம், பாதோதகம் என வீரசைவ செந்நெறிகளை விரிவாக விளக்குகிறது. இறையனுபவம் கனிந்த பாடல்களைக் கொண்டுள்ளது. வீரசைவம், சைவ சிந்தாந்த செந்நெறிகளை கலந்த பாமாலையாக விளங்குகிறது.
இதயத்தில் சிவலிங்க உணர்வு வாய்க்கப்பெற்றவன் லிங்கநிசன். லிங்கம் பிரமமாகும் என்பதோடு, அந்த பிரமமே உலகம் தோன்றக் காரணம் என்ற கருத்து, ஆன்மச் சிந்தனைக்கு திறவுகோலாக விளங்குகிறது.
– ராம.குருநாதன்