வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியானது. ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமாக கிடைப்பது. இதை உணர வைக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால்.
தனக்கு உரிய வாழ்க்கையை, பிறர் நலனுக்காக வாழ்கிறேன் என்று ஏமாற்றாமல் இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தி உணர்த்துகிறது. இதில், அனுபவங்கள் சார்ந்த கதைகள் மிக எளிமையாக விவரிக்கப்பட்டு உள்ளன. வாழ்க்கை என்பது இனிமையாக வாழ்வதற்கே என்ற தத்துவத்தை மனதில் பதித்து விடுகிறது.
புரியும் வண்ணம் வாழ்க்கை நிகழ்வுகளை சிறிய கதைகள் போல் எடுத்துக்காட்டாக கூறப்பட்டுள்ளது. தன் நலத்துடன் இருப்பது தவறு அல்ல; தன்னை மதிப்பவன் தான் பிறரையும் மதிப்பான் என்பதை புரிய வைக்கிறது. தேவையானதை எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்பதை சுவைபட தரும் நுால்.-
– ராம்