காலடியில் ஆதிசங்கரர் காலடி வைத்தது முதல், காஞ்சியில் முக்தி அடைந்தது வரையிலான புனித வரலாற்றை இனிமையாக சொல்லும் நுால்.
ஹிந்து தர்மத்தை பரப்பி அஞ்ஞான இருளை அகற்றியது, அத்வைத தர்மத்தை நிலைநாட்டியது, சாதி பேதங்களை கடந்து ஆன்மிக மறுமலர்ச்சி கண்டது உள்ளிட்ட தகவல்களை உடையது.
பிரம்மம் அழியாதது, உலகம் மாயை சூழ்ந்தது, கயிலையில் தரிசித்தது, அற்புதங்கள் ஆற்றியதை அழகுற விளக்குகிறது. மக்கள் போக்கிலே சென்று மன மாற்றம் கொள்ளச் செய்து திருப்பியது பற்றி கூறப்பட்டுள்ளது.
பிரிந்து கிடந்த ஹிந்து மதத்தவர்களை இணைத்து, ஒன்றே பிரம்மம் என்பதை நிலைநாட்டியதும் உள்ளது.
ஆதிசங்கரரின் அற்புத வாழ்வையும், அத்வைத தத்துவங்களையும் கூறும் அறிவு நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்