திருப்பாவை பாசுரத்திற்கு பூர்வாசாரியார்களின் உரையை ஒட்டி, எளிய தெளிவுரை சுருக்கமாக தரப்பட்டுள்ள நுால். பழம் பெருமையை நிலை நிறுத்தும் தஞ்சை ஓவிய பாணியில், 30 பாடல்களுக்கும் படங்கள் சிறப்பாகத் தரப்பட்டுள்ளன.
பாடல்களுக்கு பொதுப் பொருள், சிறப்புப் பொருள், குறிப்புப் பொருள் தரப்பட்டுள்ளது. எதையும் விட்டுவிடாமல், ஆண்டாள் வரலாறு, திவ்ய தேச விளக்கங்கள், பழைய உரையாசிரியர்களின் நயங்கள், இலக்கிய – இலக்கணக் குறிப்புகள் சுவைபட தரப்பட்டுள்ளன.
திருப்பாவையில் பக்தி ரசம், இயற்கை வளம், மகிழ்வுத் திறம் என மனதில் ஓட விடுகிறது.
திருப்பாவைக்கு விளக்கம் தரும் பக்தி நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்