சிவம் என்றால் மங்களம்; லஹரி என்றால் ஆனந்தத்தில் திளைப்பது; சிவனை நினைத்து இந்த ஜீவனை ஒடுக்கி சிவத்தில் வைத்தால் ஆனந்தம் விளைவது திண்ணம். அவ்வகையில் ஆதிசங்கரர் அருளிய சிவானந்த லஹரியில் அமைந்த ஸ்லோகங்களுக்கு பொருள் எளிய நடையில் கவிதையாக தரப்பட்டுள்ளது.
பக்திக்கு இலக்கணமாக அமையும் ஸ்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாதசேவனம், அர்ச்சனம், வந்தனம் தாஸ்யம் ஸக்யம், ஆதம்நிவேதனம் யாவும் இறைவனை தனதாக்கிக் கொள்ளும் வழிகள். அனைத்தையும் சிவானந்த லஹரியில் அனுபவிக்கலாம். கர்மங்களை உண்டாக்கும் சக்திகளை சிவனிடம் செலுத்தி ஜீவனைப் புனிதப்படுத்த விளக்கங்கள் பதிவிடப்பட்டுள்ளன. எளிய நடையில் கவிதை வடிவிலான நுால்.
–- புலவர் சு.மதியழகன்