ஆங்கிலேயர் வந்த பின் தான் இந்தியாவில் கல்வி வளர்ச்சி பெற்றது; பொருளாதாரம் சீரானது; அறிவியல் அறிவு கிடைத்தது என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றனர். அது எந்தளவுக்கு மறைக்கப்பட்ட உண்மை என்பதை தெளிவாக விளக்கும் நுால்.
பாரம்பரிய கல்வியின் வரலாறு எப்படி எல்லாம் திரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பொய்யை தொடர்ந்தால் காலப்போக்கில் உண்மையாகிவிடும் என்பதற்கு சரியான உதாரணம் இது. அடிப்படை கல்வி அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கக்கூடாது; உயர் கல்வியானது மேல்தட்டு மக்களுக்கு கிடைக்கக்கூடாது என்பது தான் பிரிட்டிஷாரின் நோக்கமாக இருந்தது.
வசை பாடுபவர்களுக்கு உண்மை நிலையை புட்டு புட்டு வைக்கும் நுால்.
--– இளங்கோவன்