தமிழ் இலக்கியங்களை போற்றும் நுால். இலக்கியச் சுவை ததும்புகிறது.
இந்திய நிலப்பரப்பில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் சுமாராக, 1 லட்சம்.அதில் 60 சதவீதம் தமிழ் கல்வெட்டுக்கள். இது தமிழின் தொன்மையை தெரிவிக்கிறது. புறநானுாறு சொல்லும், ‘நல்லது செயல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்’ என்பது எல்லா காலத்துக்கும் எல்லா மனிதர்களுக்கும் பொருந்தக்கூடியது.
கபிலரின் பாடல், பாரிவேந்தனின் வளமையையும், வறுமையையும் சொல்கிறது. கால மாற்றத்தில் எதுவும் நடக்கும் என்பதை பழங்காலத்திலே சொன்னது கண்களில் நீர் பொங்க செய்கிறது. விவசாயிகளுக்கு, ‘நண்டு ஊர நெல்; நரி ஓட கரும்பு’ என்ற கருத்தை பாடுகிறது.
தமிழை விரும்புவோருக்கு நல்ல கையேடு.
– சீத்தலைச் சாத்தன்