சாணக்கியரின் அர்த்தசாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நுால்.
பழங்கால அரசியல், பொருளாதாரம், மேலாண்மை, வாழ்வியல் தத்துவத்தை விதிமுறைகளாக்கியதை முன்வைத்துள்ளது.
நிர்வாகிக்கான நேர்மை, சிக்கனம், பிள்ளைகளின் பருவத்தில் பெற்றோர் பழக வேண்டிய விதம், அலுவல் செயல்பாட்டை எடுத்துச் செய்யும் போதும் மேற்கொள்ள வேண்டிய எச்சரிக்கை, ஐயமின்றி பணியாற்றும் திறன் வளர்த்தல், நட்பு கொள்வதில் கவனத்தை அறிய வைக்கிறது.
ராணுவம், வணிகம், குடும்பம் போன்ற துறைகளில் பாதுகாக்கப்பட வேண்டிய ரகசியங்களால் வரும் இழப்புகள், நடைமுறை சிக்கல்களில் இருக்க வேண்டிய நெகிழ்வு தன்மையை காட்டும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு